கொரோனா தொற்றினால் கிழக்கு மாகாணத்தில் முதலாவது மரணம் ஏற்பட்டுள்ளது.சம்மாந்துறையை சேர்ந்த 70 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். நேற்று (10) இரவு அவர் உயிரிழந்தார்.
கொரோனா தொற்றிற்குள்ளான நிலையில் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றுவதற்காக நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்லப்பட்ட போது, களுவாஞ்சிக்குடிப் பகுதியில் அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் மகன் கல்முனை வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த நிலையில், நேற்று கொரோனா தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.