போர்க் காலத்தை போன்று கொழும்பு மாவட்டத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதி கோத்தாபய அதிரடி உத்தரவு..!!

கொழும்பில் போர்க் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை போன்று தற்போதும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். மக்கள் ஒன்று கூடுவதனை கட்டுப்படுத்தி சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக போர் காலத்தினை போன்று கட்டுப்படுத்துமாறு பாதுகாப்பு செயலாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் நாட்டை திறந்தமை தொடர்பில் யாருக்காவது சந்தேகம் இருப்பின் அந்த சந்தேகத்தை பொது மக்களாலே இல்லாமல் செய்ய முடியும்.ஏன் நாங்கள் முடியிருக்கின்றோம்? ஏன் நாங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம்? மக்களை தூரப்படுத்தவே நாங்கள் இதனை பின்பற்றினோம். தற்போது அதனை நாங்களே சரியாக கடைபிடிக்க வேண்டும். மக்கள் சரியாக இருந்தால் நாங்கள் இந்த பிரச்சினைக்கு முகம் கொடுக்க தேவையில்லை.

பொலிஸார் மற்றும் முப்படையினரை ஈடுபடுத்தி விசேடமாக கொழும்பு மாவட்டத்தில் இந்த கட்டுப்பாடு நடவடிக்கை மேமற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் மக்கள் அனைத்து பகுதிகளிலும் பிரிந்து இருந்தனர். எனினும், இந்த பிரதேசங்களை போர் காலங்களில் இருந்ததனை போன்று கட்டுபாடுகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளரிடம் ஆலோசனை வழங்கினேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.