சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை மீளத் திறப்பது குறித்து இன்று இறுதி முடிவு..!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதா இல்லையா என்கின்ற தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளது. இதற்காக விமான நிலைய நிர்வாக அதிகாரிகள், சுற்றுலாத்துறை அமைச்சு, மற்றும் சுகாதார அதிகாரிகள் இன்று கூடி கலந்துரையாடவுள்ளனர்.கொரோனா தொற்றின் அச்சுறுத்தலினால் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஜனவரி மாதத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க ஆலோசிக்கப்பட்டிருந்தது.