சிறுமிக்கு வந்த புற்று நோய் செல்களை அழிக்க இலங்கை மருத்துவர்கள் மேற்கொண்ட வித்தியாசமான சத்திரசிகிச்சை.!! சாதனை படைத்த மருத்துவர்கள்!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியொருவரின் கையிலிருந்து எலும்பை வெட்டி அகற்றி, புற்றுநோய் செல்கள் அழிக்கப்பட்ட பின்னர் மீளவும் சிறுமியின் கையில் எலும்பு பொருத்தப்பட்டுள்ளது.

காலி, கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் கடந்த 7 ஆம் திகதி இந்த சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.கராபிட்டி வைத்தியசாலையின் குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் ஜனத் லியானகே மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கௌசல் கருணாரத்ன ஆகியோர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.இலங்கையில் இதுபோன்ற அறுவை சிகிச்சை நடந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.பொதுவாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நோயாளியின் கையை வெட்டி அகற்றப்பட்டு வந்தது.ஒன்றரை வயதான சிறுமியின் இடது கை முழங்கை மற்றும் தோள்பட்டைக்கு இடையிலான எலும்பில் புற்றுநோய் தாக்கம் இருந்தது. இதற்காக ஹீமோதெரபி சிகிச்சை பெற்று வந்தும் சிறுமி குணமடையவில்லை.இதையடுத்து சிறுமியின் கையிலிருந்து எலும்பை அகற்றி புற்றுநோய் செல்களை அழிக்க முடிவு செய்யப்பட்டது.சிறுமியின் புற்றுநோய் எலும்பு அகற்றப்பட்டு, ஒரு ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டு கராபிட்டி வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது. புற்றுநோய் நிபுணர் வைத்தியர் ஜெயமினி ஹொரந்துகொடவின் ஆலோசனையின் பேரில், கதிரியக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.