இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசாவின் மகன் கலையமுதனும், மாமனிதர் ரவிராஜின் புதல்வி பிரவீனாவும் இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
மாவிட்டபுரத்திலுள்ள மாவை சேனாதிராசாவின் இல்லத்தில் நெருக்கமான குடும்ப உறவினர்களுடன் மட்டும் இன்று (10) இரவு பதிவு திருமணம் இடம்பெற்றது.மாமனிதர் ரவிராஜ்- சசிகலா தம்பதியினரின் புதல்வி பிரவீனா, கடந்த பொதுத்தேர்தல் சமயத்தில், தாயாரின் பிரச்சார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.கலையமுதன் வலிகாமம் வடக்கு பிரதேசசபை உறுப்பினராக உள்ளார். பிரவீனா கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.