கொரோனா வைரஸை குணப்படுத்தும் ஆயுர்வேத மருந்து தொடர்பில் அரச மருத்து அதிகாரிகளின் தீர்மானம்..!!

கொரோனா வைரஸை குணப்படுத்துவதற்காக உள்ளூரில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் ஆயுர்வேத மருந்து தொடர்பில் சுகாதார அமைச்சு எடுத்துள்ள நிலைப்பாட்டை தாம் ஏற்றுக்கொள்வதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்திருக்கிறது.

அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி ஹரித்த அலுத்கே இதனை ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.எனவே, கொரோனா ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்காது பொதுமக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவது பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் ஹரித்த அலுத்கே எச்சரித்திருக்கிறார்.சுகாதார அமைச்சின் அறிவித்தலின் படி உள்ளூரில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் ஆயுர்வேத மருந்து கொரோனா வைரசை குணப்படுத்தும் என்பதில் இன்னும் விஞ்ஞான பூர்வமான உறுதிப்பாடு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.எனவே, அந்த மருந்து கொரோனா வைரசுக்கானா குணப்படுத்தல் மருந்தாக இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும், சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.இந்த நிலைப்பாட்டை தாமும் ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே அவ்வாறான மருந்தொன்று விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுமாக இருந்தால், அது தொடர்பில் அரசாங்கம் பொது மக்களுக்கு அறிவிக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.