மழை வெள்ளத்தில் வீழ்ந்து பரிதாபமாக மரணமான வயோதிபர்..!! யாழில் சோகம்..

மழை நிரம்பிய வெள்ளக்குழியில் தவறுதலாக விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி துன்னாலை பகுதியைச் சேர்ந்த நபரொருவர் மழை வெள்ளத்தில் வீதியோரமாக சென்றவேளை அருகிலிருந்த குழியினுள் தவறுதலாக விழுந்துள்ளார்.வீட்டிலிருந்த சென்றவரை காணாத உறவினர்கள் தேடியபோது வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டனர்.சம்பவம் தொடர்பில் பருத்திதுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.