வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் தொடர்பில் அரசாங்கத்தின் திடீர்த் தீர்மானம்..?

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் நடவடிக்கையை அகற்றுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் அனைவரும் விமான நிலையத்திலேயே பி.சீ.ஆர். பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் 14 நாட்கள் தமது வீடுகளிலும் சுய பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.