கொரோனா அச்சம்..நாட்டின் முக்கியமான அரசியல்வாதி தனிமைப்படுத்தலில்..!!

நாட்டின் முக்கியமான அரசியல்வாதி ஒருவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

கொவிட் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ள விவசாய சேவை ஆணையாளர் நாயகத்துடன் இந்த அரசியல்வாதி காலை உணவு உட்கொண்டுள்ளார்.கடந்த 28ம் திகதி ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற செயலமர்வு ஒன்றில் விவசாய சேவை ஆணையாளர் பங்கேற்றிருந்தார் எனவும் அதன் பின்னர் அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்தச் செயலமர்வில் பங்கேற்ற பெரும் எண்ணிக்கையிலான அரச அதிகாரிகள் பணியாளார்கள் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதேவேளை, பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன உள்ளிட்ட அவரது அலுவலக பணியாளர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.பொலிஸ் மா அதிபரின் அலுவலக பணியாளர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதியான காரணத்தினால், இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.