உலகின் மிகச் சக்திவாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை வம்சாவளிப் பெண்மணி..!

2020ஆம் ஆண்டில் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை ஃபோர்பஸ் இதழ் வெளியிட்டுள்ளது.இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஷெமரா விக்ரமநாயக்க இந்தப் பட்டியலில் 29 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

புகழ்பெற்ற ஃபோர்பஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவியரீதியில் பல்வேறு பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. இதன்படி, உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகிறது. உலகின் பல்வேறு துறைகளிலும் சிறந்து, ஆளுமையுடன் விளங்கும் பெண்களிருந்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஷெமரா விக்ரமநாயக்க பிரித்தானியாவில் உள்ள மெக்குவாரி குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.ஷெமராவின் தந்தை இலங்கை மருத்துவர். ஷெமரா சிறு வயதில் இலங்கையில் வசித்தார். பின்னர் 13 வயதில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று அங்கு கல்வி கற்றார். 58 வயதான அவர் இப்பொழுது பிரித்தானியாவில் வசிக்கிறார்.
ஜேர்மன் ஜனாதிபதி அங்கெலா மெர்க்கெல் 2020 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.ஃபோர்பஸ் பத்திரிகை படி, அவர் தொடர்ந்து 10 வது ஆண்டாக உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணி ஆனார்.