யாழ்.சாவகச்சேரியில் சற்று முன்னர் கோர விபத்து..9 வயதுச் சிறுவன் உட்பட இருவர் பரிதாபமாகப் பலி..!!

சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

50 வயதான பெண்ணும், 9 வயதான சிறுவனும் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயமடைந்துள்ளனர்.அவர்கள் பயணித்த கார் ரயரொன்று காற்று போய், தண்ணீர் பவுசருடன் மோதி விபத்திற்குள்ளானது.