நாட்பட்ட கடுமையான நோய்களையும் ஓட ஓட விரட்டி உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அருமையான மருந்து..!!

வேப்பிலையின் மருத்துவக் குணங்கள்: வேப்பிலை சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச்சாறுக்கு உண்டு.

வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.மலேரியா காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும்.இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும். காளான் நோய்களான டிரைக்கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும்.பக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது.புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால், புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர்.ஆவாரம்பூவின் மருத்துவக் குணங்கள்:நெல்லிக்காய், செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, வெந்தயம் ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொண்டு, நல்லெண்ணையில் காய்த்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி நன்கு வளர ஆரம்பிக்கும்.ஆவாரம்பூ, காய், பட்டை, இலை, வேர் அனைத்தையும் காய வைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எரிச்சல் குறைந்து நல்ல தீர்வுக் காண முடியும். உடல் பலம் அதிகரிக்க வேண்டும் என விரும்புவோர், ஆவாரம்பூவை பாலில் கலந்து குடித்து வரலாம்.மினுமினுப்பான சருமம் பெற வேண்டும் எனில், ஆவாரம்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மினுமினுப்பான சருமம் பெறலாம்.ஆவாரை கொழுந்து, ஆவாரம்பூ, ஆவாரை இலை, கீழாநெல்லி, நெல்லி வற்றல் ஆகியவற்றை ஐந்து கிராம் அளவு எடுத்து, மோர் விட்டு நன்கு கலந்து, அதை வெயிலில் உலர்த்தி காலை, மாலை அரை கிராம் அளவு மோரில் கலந்து உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோய் குறையும்.ஆவாரம்பூ, கறிவேப்பிலை, நெல்லிக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும்.ஆவாரம்பூவின் நடுவில் இருக்கும் பகுதியை 50 கிராம் அளவு எடுத்து, இரவு நீரில் ஊறவைத்து, காலையில் அந்த நீரை வடிகட்டி அதனுடன் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.