தனது சகோதரி குளிப்பதை இரகசியமாக காணொளியாக பதிவு செய்த ஒருவரைப் பற்றி விசாரிக்கச் சென்ற அவரது சகோதரர், அந்த நபரால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கொழும்பின் வனாத்தமுல்லையில் உள்ள அல்ககும்புர பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவது அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், சந்தேக நபருக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என்று அப்பகுதியில் வசிப்பவர்கள் போராட்டம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.