இலங்கையில் சமூகத்திற்குள் பரவியுள்ள கொரோனா வைரஸ்..வீடுகளில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்..!!

இலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

இதுவரையில் அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் அல்ல அவர்கள் சமூகத்தில் வாழ்பவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அட்டலுகம நோயாளிகள் வீட்டில் உள்ளனர். அத்துடன் வீட்டில் உயிரிழக்கும் கொரோனா நோயாளிகள் சமூகத்தில் வாழ்பவர்களாகும்.இதுவரையில் இலங்கையில் கொரோனா வைரஸ் சமூக பரவல் வரை அதிகரித்துள்ளது. எனினும் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.