வவுனியாவில் வீட்டுக்காரரைக் கொல்ல வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த பயங்கர கரிய உருவம்..!!

வீடொன்றுக்கு அருகில் பதுங்கியிருந்த ஆபத்தான விலங்கு ஒன்று விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தச் சம்பவம் வவுனியாவின் ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இன்று முன்னிரவு வேளை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்று காட்டுப் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அதேவேளை வீட்டின் உரிமையாளர் வீட்டுக்கு பின்புறமாக சென்றுள்ளார்.வீட்டின் பின்புறம் இருந்த கோழிக்கூட்டின் அருகே வித்தியாசமான கறுப்பு உருவம் ஒன்றைக் கண்டு அதன் அருகில் சென்று பார்த்துள்ளார். அதன்போது குறித்த உருவம் அசைவதைக் கண்டு திகைத்துப்போய் வீட்டினுள் ஓடிச்சென்றுள்ளார்.வீட்டிலிருந்து மின்சூழ் ஒன்றினை எடுத்துவந்து பார்த்தபோது கரடி ஒன்று நிற்பது தெரிந்துள்ளது. எவ்வாறாயினும் அயலவர்கள் உதவியுடன் கடும் கூக்குரலிட்டு குறித்த கரடி காட்டினுள் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.இதேவேளை குறித்த நபர் வீட்டின் பின்புறம் செல்வதற்கு முன்னர் ஏதோ சரசரத்து சத்தம் கேட்பதாக அவரது மகள் கூறியதாகவும், ஆனாலும் வீட்டு நாய் குரைக்காமல் இருந்ததனால் அதை அசண்டையீனமாக விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓமந்தை பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கரடியினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.