யாழ்.நகரில் இப்படியும் நடக்கின்றது…தனது பணப்பையை பறித்துச் சென்ற திருடனுக்கு பணத்துடன் உணவும் கொடுத்தனுப்பிய மூதாட்டி..!!

யாழ்.நகரில் வீதியால் சென்று கொண்டிருந்த வயதான பெண் மணியின் பண பையை பறித்துக் கொண்டு ஓடிய திருடனை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து நையப்புடைத்துள்ளனர். இந்நிலையில், குறித்த பையுக்கு சொந்தமான வயோதிபப் பெண்மணி திருடனுக்கு பணம் கொடுத்து குறித்த அனுப்பிவைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றிருக்கின்றது.

யாழ். நகரில் காங்கேசன்துறை வீதியில் நடந்து சென்ற வயோதிப பெண்ணின் பணப் பையை பறித்த இளைஞர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.இதன்போது மூதாட்டி எழுப்பிய குரலை அடுத்து வீதியால் பயணித்த இளைஞர்கள் குறித்த திருடனை மடக்கிப் பிடித்து மூதாட்டியின் பணப்பையை மீட்டெடுத்தனர்.அத்துடன் மூதாட்டி பறிகொடுத்த 20 ஆயிரம் ரூபா பணமும் பத்திரமாக மீட்கப்பட்டது. இதனையடுத்து அங்கே கூடி நின்றவர்களால் திருடனை நையப்புடைத்தபோது, பணப்பையை பறிகொடுத்த மூதாட்டி அதனை தடுத்து நிறுத்தி,திருடனிற்கு உணவும் வாங்கி கொடுத்து, ஆயிரம் ரூபா பணமும் வழங்கி அனுப்பி வைத்தார்.எனினும், அங்கு கூடியவர்கள் திருடனை பொலிசாரிடம் ஒப்படைக்க முனைந்தபோதும், அந்த மூதாட்டி அதற்கும் இணங்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.