அடுத்தடுத்து தமிழகத்தை தாக்கப் போகும் ஐந்து புயல்கள்..!! தாக்குப் பிடிக்குமா தமிழ்நாடு..?

தமிழகத்தில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஐந்து புயல்கள் ஏற்படவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.


தமிழகத்தின் கடந்த சில வாரங்களாகவே புயல் காற்று, மழையால் மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.நிவர் மற்றும் புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களே இன்னும் சரிசெய்யப்படாத நிலையில், அடுத்தடுத்த ஐந்து புயல்கள் உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதில், இன்று “டவுட்டோ” என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு புயல் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வரும் 17ஆம் திகதி “யாஸ்” எனும் புயலும், டிசம்பர் 24ஆம் திகதி “குலாப்” எனும் புயலும் வர வாய்ப்பு உள்ளதாகவும், 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் திகதியே “ஷாஹீன்” என்ற புயல் வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்பின் ஜனவரி 8 ஆம் தேதி “ஜவாட் ” என்ற புயல் வரலாம் எனவும் சென்னை ஆய்வு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.