சற்று முன்னர் கிடைத்த செய்தி…மேலும் 8 பேருக்கு கொரோனா..!!மொத்த எண்ணிக்கை 303ஆக அதிகரிப்பு

இலங்கையில் புதிதாக 8 கொரோனா வைரஸ் தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து இலங்கையில் உறுதிசெய்யப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிகை 303ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இன்று மாத்திரம் இதுவரை 32 கொரோனா வைரஸ் தொற்றாளிகள் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இன்று காலை 24 கொரோனவைரஸ் தொற்றாளிகளும் மாலை 4 மணியளவில் 8 தொற்றாளிகளும் இனங்காணப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த 8 பேரும் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்களாவர்.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் குணமடைந்தோரின் எண்ணிக்கை 97ஆக உயர்ந்துள்ளது.இன்று காலை ஒருவர் குணமடைந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.திணைக்களத்தில் காவல் பணிகளில் ஈடுபட்டிருந்த தனியார் பாதுகாப்பு சேவையை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டமையை அடுத்தே அந்த திணைக்களம் இன்று காலை மூடப்பட்டது.இது தொடர்பில் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.