ஒரே நாளில் பலியான 260 கொரோனா நோயாளிகள்!! பிணவறையாக மாறிய பிரித்தானிய விமான நிலையம்..!!

கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸால் கடந்த சில மாதங்களாக உலக மனிதர்களின் உயிர்கள் மாய்ந்துவரும் நிலையில், பிரித்தானியாவில் இன்று ஒரு நாளில் 260-பேர் உயிரிழந்துள்ளனர்.பிரித்தானியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,019-ஐ எட்டியுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இக் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் உலகத்தில் இறப்பு வீதம் கூடிக்கொண்டு வருகின்றதே தவிர குறைந்தமாதிரி புள்ளிவிபரங்கள் தெரிவிக்கவே இல்லை.மேலும் பிரித்தானியாவில் இவ்வாறு அதிகமானோர் நாளொருவண்ணம் இறந்துவரும் நிலையில் பேர்மிங்கம் விமான நிலையத்தை பிணவறையாக மாற்றுவதற்கு நடவடிக்கையும் நடந்துகொண்டுவருகின்றது.பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அதிகரித்துவரும் பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பேர்மிங்காம் விமான நிலையத்தில் தற்காலிக பிணவறை ஒன்றை உருவாக்கி வருகின்றனர்.குறித்த பிணவறையில் சுமார் 12,000 சடலங்கள் வரை சேகரித்து வைத்துக் கொள்ள முடியும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.பிரித்தானியாவில் 20000 க்கு அதிகமான உயிரிழப்புக்கள் நிகழ வாய்ப்புண்டு என கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.பிரித்தானியாவில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கும் மண்டபமான எக்செல் மண்டபத்தைக் கூட அண்மையில் தற்காலிக மருத்துவமனையாக்கியதும் குறிப்பிடத்தக்கது.எனவே பிரித்தானிய வாழ் தமிழ் மக்களே அநாவசியமாக வெளியில் செல்லாது வீடுகளில் இருந்து உங்களை நீங்களே முடிந்தளவு இத் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.