தமிழர்கள் அதிகம் வாழும் கொழும்பு வெள்ளவத்தையில் அடையாளம் காணப்பட்ட பெருமளவு கொரோனா தொற்றாளர்கள்..!!

நேற்று இலங்கையில் 649 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 295 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களின் 49 பேர் வெள்ளவத்தையை சேர்ந்தவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.மட்டக்குளியில் 29 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொம்பனி வீதியில் 7 பேரும், கொட்டாஞ்சேனையில் 21 பேரும், தெமட்டகொடயில் 22 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதேவேளை, இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது.இறுதியாக கிடைக்கப்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் படி 703 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.இவர்களில் 466 தொற்றாளர்கள் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடனும் ஏனைய 237 பேர் சிறைச்சாலை கொத்தணியுடனும் தொடர்புடையவர்கள் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதற்கமைய நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 28 580 ஆக உயர்வடைந்துள்ளது. எனினும் இவர்களில் 20 804 பேர் குணமடைந்துள்ளனர்.7634 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை 491 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.