இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் மேலும் உயர்வு..இன்றும் இருவர் மரணம்..!!

இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்துள்ளது.தேசிய தொற்று நோயியல் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இன்றைய தினம் இரண்டு கொவிட் மரணங்கள் தொடர்பில் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 28,580 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில், சுமார் 20,804 பேர் குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.