யாழ் தங்க நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..திடீரெனச் சரிந்த தங்கத்தின் விலை..!!

கொரோனா தொற்று காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. வல்லரசு நாடுகளின் பொருளாதார சிக்கலைத் தீர்ப்பதற்காக உலக நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதும், பொருளாதார மந்த நிலையும்தான் வீழ்ச்சிக்குக் காரணம் என பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.தற்போது யாழ்ப்பாணத்திலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை 94 ஆயிரத்து 600 ரூபாயாகக் குறைவடைந்துள்ளது.தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில், நவம்பர் மாதத்தில் விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது.கடந்த நவம்பர் மாத இறுதிவரை குறைந்து கொண்டே இருந்த தங்கத்தின் விலையானது, உயர ஆரம்பித்தது, ஆனால் தொடர் ஏற்றத்திற்குப் பின் இன்று மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது.இன்று 22 கரட் ஆபரணத்தங்கத்தின் விலை பவுணுக்கு 2 ஆயிரத்து 100 ரூபாய் குறைந்து, 94 ஆயிரத்து 600 ரூபாய்க்கு காணப்படுகிறது.

இன்று 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுணுக்கு 2 ஆயிரத்து 300 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.அதேபோன்று 21 கரட் தங்கத்தின் விலை 90 ஆயிரத்து 300 ரூபாயும் 20 கரட் தங்கத்தின் விலை 86 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.