உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குலின் பின்னணியில் யார்..? காலம் கடந்து வெளிவரும் உண்மைகள்.!!

முன்னைய அரசாங்கத்தில் புலனாய்வு அமைப்புகள் பலவீனப்படுத்தப்பட்டு அவர்களின் முதுகெலும்பு முறிக்கப்பட்டிருந்ததென முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவினை பாதுகாக்க முற்பட்டதால் தானும் விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டவன் என அவர் தெரிவித்துள்ளார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது பேசிய அவர்,

வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பொன்றின் கண்காணிப்பின் கீழ், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக நான் கருதுகிறேன்.சஹ்ரான் ஹாசிம் தற்கொலை குண்டுதாரிகளின் தலைவரும் இல்லை. சஹ்ரான் ஹாசிமை கண்காணிப்பதற்கு 2004 முதல் இராணுவ புலனாய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர்.இவரைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரி கூட ஐந்து வருடங்களிற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.மாவனெல்லயில் புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்டமை குறித்த விசாரணைகள், வவுணதீவில் பொலிஸாரின் கொலைகள் குறித்த விசாரணைகள், வானத்தவில்லில் வெடிமருந்து மீட்கப்பட்டமை போன்றன சிஐடியினர் சரியான பாதையை பின்பற்றாததன் காரணமாகவே பிழையாக வழிநடத்தப்பட்டன.சரியான தரப்பிற்கு புலனாய்வுச் செய்திகளை அனுப்பத் தவறியதன் காரணமாகவே இத்தாக்குதலை தடுக்க முடியாமல் போய்விட்டது என்றார்.