புரேவிப் புயலைப் பயன்படுத்தி மூதாட்டிக்கு சுடுநீர் கொடுத்து கொள்ளையடித்த கில்லாடித் திருடர்கள் அதிரடியாகக் கைது..!!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் கல்வயல், மட்டுவில் பகுதிகளில் கடந்த டிசம்பர் 2ஆம் திகதி இரவு புரேவி புயலால் கடும் மழை பொழிந்து கொண்டிருந்த வேளை 7 வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பலில் இரண்டு பேர், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் மற்றும் அளவெட்டியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 7 தங்கப் பவுண் நகைகள், 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டன. அத்துடன், 3 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் கல்வயல், மட்டுவில் பகுதிகளில் கடந்த டிசெம்பர் 2ஆம் திகதி இரவு புரேவி புயலால் கடும் மழை பொழிந்து கொண்டிருந்த வேளை 7 வீடுகளில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது. வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளைப் பார்த்து கொள்ளையர்கள் ஐவர் இந்தக் கைவரிசையைக் காண்பித்திருந்தனர்.இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் மூவர் மட்டும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். அதிலும், ஒரு வீட்டில் கொள்ளையர்கள் புகுந்தபோது திகைப்படைந்த மூதாட்டிக்கு சுடுநீர் வழங்கி ஆசுவாசப்படுத்தி விட்டு கொள்ளையிட்டு சென்றனர்.முகங்களை மறைத்தவாறு வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையர்கள் ஐவர், வயோதிபர்களை அச்சுறுத்தி தாலிக்கொடி உள்ளிட்ட 15 பவுண் தங்க நகைகளும் 2 லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டன என்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.அவர்களின் விசாரணைகளில் சுன்னாகம் மற்றும் அளவெட்டியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கொள்ளையிட்ட நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் பெண் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

இன்று வரையான விசாரணையில் கொள்ளையர்களிடமிருந்து 7 தங்கப் பவுண் நகைகளும் 30 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், சந்தேக நபர்களின் உடமையிலிருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன. கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.சந்தேக நபர்கள் இருவரும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டுள்ளனர். சான்றுப்பொருள்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.