இலங்கையில் மேலும் ஐந்து தனியார் மருத்துவமனைகளில் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு அனுமதி..!!

பி.சி.ஆர் சோதனைகளை நடத்த மேலும் ஐந்து தனியார் மருத்துவமனைகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சின் ஆய்வக சேவைகள் துணை பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவிக்கையில், நாட்டில் தினசரி 20,000 பி.சி.ஆர் சோதனைகளை நடத்தும் இலக்கை நிறைவேற்றும் முயற்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.தற்போது 13,000 முதல் 14,000 பி.சி.ஆர் சோதனைகள் தினசரி நடத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் இதனை 20,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.அத்துடன், உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு இரண்டாவது தொகுதி விரைவான ஆன்டிஜென் டெஸ்ட் கிட்களை வழங்கியுள்ளது. இதுவரை 100,000 சோதனை கருவிகள் மருத்துவமனைகளில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சின் ஆய்வக சேவைகள் துணை பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.