மணமகளுக்கு கொரோனா தொற்று..பாதுகாப்புக் கவச உடையுடன் நடந்த விசித்திரத் திருமணம்.!! (வைரலாகும் காணொளி)

ராஜஸ்தானில் மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் PPE உடையணிந்து திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ராஜஸ்தானை சேர்ந்த மணப்பெண் ஒருவருக்கு ஞாயிறன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா இருப்பது உறுதியானது.இதனையடுத்து ஷாபாத் பாராவில் உள்ள கெல்வாரா கொரோனா மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எனினும் திருமணத்தை மாற்றி வைக்க விரும்பாத தம்பதியினர் அன்றே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.இதன்படி, அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி, பிபிஇ கிட் அணிந்து, இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.மணமகன், அவர்களது பாரம்பரிய தலைப்பாகையை அணிந்துள்ளார். கை உறை அணிந்து, உடல் முழுக்க பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்துள்ளனர். அதுபோல் திருமணம் செய்து வைக்கும் புரோகிதரும், பாதுகாப்பு உடை அணிந்துள்ளார்.

மேலும், திருமணத்தில் கலந்துகொண்ட மணமக்களின் உறவினர்கள் இருவரும் பிபிஇ உடை அணிந்திருக்கும் காட்சி வீடியோவில் இடம்பெற்றுள்ளது.இந்த வீடியோ காட்சிகள்வெளியாகி வைரலான நிலையில், பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், ஏன் திருமணம் செய்ய இவ்வளவு அவசரம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.