வீட்டில் உயிரிழந்த நபருக்கு கொரோனா..கட்டியணைத்து அழுதவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி..!!

கொலன்னாவவின் சிங்கபுரவில் வீட்டில் உயிரிழந்தவர் கொரோனா தொற்றினாலேயே உயிரிழந்தமை தெரிய வந்துள்ளது. 55 வயதான நபர் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

வீட்டில் அவர் சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து குடும்பத்தினர் அவரது சடலத்தை கட்டியணைத்து அழுதுள்ளனர்.குடும்ப உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில், சடலத்தை கட்டியணைத்து அழுத குடும்ப உறுப்பினர்கள் 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.மரணச்சடங்கிற்கு வந்த மேலும் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.