தற்போது கிடைத்த செய்தி.. 6வயது சிறுமி உட்பட இருவருக்கு கொரோனா!!

பசறை – கணவரெல்ல பகுதியில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கணவரெல்ல பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஆண் ஒருவருக்கும், 6 வயதுடைய சிறுமி ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் கடந்த 3ஆம் திகதி 22பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகிய நிலையில், குறித்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.பசறை– கணவரெல்ல பகுதியில் இதுவரை 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.