அதிகாலை வேளையில் இலங்கையின் மத்திய பகுதியில் திடீர் நிலநடுக்கம்!! பெரும் பீதியில் பொதுமக்கள்..

கண்டி – திகன பிரதேசத்தில் இன்றும் சிறிய அளவான நில அதிர்வு ஒன்று பதிவாகி இருந்தமையை, புவிசரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணிமனை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 5.42 அளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதுடன், இது ரிக்டர் மானியில் 2 மெக்னிரியூட் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கு முன்னர் கடந்தமாதம் 18ம் திகதியும் 2 மெக்னிரியுட் அளவில் நில அதிர்வு ஒன்று இந்த பிரதேசத்தில் பதிவாகி இருந்ததுடன், அதற்கு முன்னரும் அந்த பகுதியில் பல சந்தர்ப்பங்களில் நில அதிர்வுகள் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.