தொடரும் சீரற்ற காலநிலை..யாழ், கிளிநொச்சி கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு..!!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு நாளை (7) திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.புரவிப் புயல் காரணமாக கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வடமாகாணம் முழுவதும் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டது.இந்த நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.