இலங்கையை விட்டு விலகிச் செல்லும் புரவிப் புயல் தாழமுக்கமாக வலுவிழப்பு..!!

புரெவிப் புயல் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவிழந்து நாட்டை விட்டு மேலும் விலகிச் செல்கின்றது. சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறைவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை செய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.