YOU TUBE இப்போது வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டும் இல்லாமல் இண்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க கூடிய முக்கிய இடமாக மாறிவிட்டது. உலகம் முழுவதிலும் இருந்து சுயமாகத் தொழில் செய்ய விரும்பிய பல்லாயிரக் கணக்கானோர் தற்போது யூ ட்யூப் மூலம் மாதம் தோறும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.
யூ ட்யூபில் நாள் தோறும் பணம் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்க முக்கிய காரணங்கள் யூ ட்யூபில் பணம் சம்பாதிக்க எந்த முதலீடும் தேவை இல்லை. ஏற்கனவே பயன்படுத்தும் இண்டர்நெட் கனெக்சன் கொண்ட ஸ்மார்ட் போன் இருந்தால் போதும். மேலும், இந்த தொழிலை செய்வது மிக எளிது.இத்துடன் யூ ட்யூப் கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனம் எனவே மிகவும் நம்பிக்கையானது.
யூ ட்யூபில் இப்படி பணம் சம்பாதிக்க செய்ய வேண்டியது ஒன்று தான் ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்து வீடியோவை அப்லோட் பண்ண வேண்டும்.வீடியோ என்றதும் பெரிதாக யோசிக்க வேண்டாம் உங்கள் வீட்டில் உள்ள பூனைக் குட்டி செய்யும் குறும்புகளையோ,நீங்கள் ஊர் சுற்றுவதையோ,சமையல் செய்வதையோ மொபைலில் வீடியோவாக எடுத்து யூ ட்யூபில் அப்லோட் செய்து பணம் சம்பாதிக்கலாம்.
எனவே இது பகுதி நேரத்தில் கூடுதலாக பணம் சம்பாதிக்க விரும்புபவர்கள்,மாணவர்கள் , இல்லத்தரசிகள்,சுயமாக தொழில் செய்ய விரும்புபவர்கள் என்று அனைவருக்கும் பொருத்தமான தொழில்.ஆனால், இப்படி யூ ட்யூபில் பணம் சம்பாதிப்பதற்கு இந்த தொழிலில் உள்ள அனைத்து விஷயங்களையும் முறையாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.நீண்ட காலமாக யூ-டியூப் மூலம் பணம் சம்பாதிக்கும் வழிகளில் சில மறைமுகமான தடைகளை கூகுள் ஏற்படுத்தியிருந்தது.
தற்போது இலங்கையிலுள்ளயு-டியூப் பயனாளர்களுக்காக தமது பல நிபந்தனைகளைத் தளர்த்தி இதில் காணொளிகளை தொடர்ந்து பதிவிடுபவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பைஏற்படுத்தியுள்ளது. இதனால் இனி வெறும் பொழுது போக்குக்கு மட்டுமல்லாமல் நிறையவே தரமான காணொளிகளை உருவாக்குவதன மூலம் நீங்களும் யூ-டியூப் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்ற தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.