முன்னாள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க திடீர் மரணம்..!!

முன்னாள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க தனது 66 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளனர்.திடீர் உடல் நலக் குறைவு காரணமாக அண்மையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் உயிரிழந்துள்ளார்.


ஏக்கநாயக்க குருணால் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு பல சந்தர்ப்பங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், காணி மற்றும் கலாசார விவகார அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.இதேவேளை 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.