திடீரெனக் காணாமற்போய் மீண்டும் அதேயிடத்திற்கு வந்த அம்மன் சிலை.!! பார்ப்பதற்கு படையெடுக்கும் பொதுமக்கள்.!!

மலையகம் மத்திய மலைநாட்டில் உள்ள நோர்வூட் கிழ்பிரிவு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் காணாமல் போன அம்மன் சிலை நான்கு மாதங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். சிலை கெசல்கமுவ ஒயாவின் அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சிலை திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு ஹற்றன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேக நபரை 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஜெயராம் ட்ரெஸ்கி உத்தரவிட்டார்.

குறித்த சந்தேக நபர் அம்பேவெல பகுதியியை சேர்ந்தவர் எனவும் இவர் தலவாகலை பகுதியில் இரண்டு ஆலயங்கள், வெளிமடை அக்கரபத்தனை பகுதியில் உள்ள ஆலயங்கள் உடைப்பு மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுட்டுள்ளவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.கடந்த 14.08.2020 நோர்வூட் கிழ்பிரிவு தோட்டத்தில் உள்ள ஆலயம்.உடைக்கப்பட்டு அதில் இருந்த அம்மன் சிலை திருடப்பட்டது.மேலும் மீட்கபட்ட அம்மன் சிலையினை ஹற்றன் நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட போது குறித்த சிலையினை ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இதற்கமைய நேற்று சனிக்கிழமை நோர்வூட் பொலிஸார் அம்மன் சிலையை ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைத்ததுடன் விசேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன.காணாமல் போய் 4 மாதங்களின் பின் மீண்டும் அதே இடத்திற்கு வந்த அம்மன் சிலையைப் பார்க்க அப்பகுதி மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்