தலைமன்னர் கடற்கரையில் கரையொதுங்கிய அமுதவிஜி ஸ்ரெபானி இராணுவப் பாதுகாப்பில்..!!

தலைமன்னார் பியர் கடற்பரப்பில் மூழ்கிய நிலையில் கரையொதுங்கிய கண்ணாடியிழை படகு ஒன்று நேற்று சனிக்கிழமை மாலை குறித்த பகுதி மீனவர்களால் கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை மாலை தலைமன்னார் கடல் பகுதிக்கு சற்று தொலைவில் நீரில் மூழ்கிய நிலையில் கரை ஒதுங்கி வந்த கண்ணாடி இழை படகினை அப்பகுதி மீனவர்கள் அவதானித்துள்ளனர்.இந்த நிலையில், தலைமன்னார் பியர் பகுதி மீனவர்களால் குறித்த படகு மீட்கப்பட்டு தலைமன்னார் பியர் இறங்குதுறை பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.குறித்த படகு தொடர்பில் தலைமன்னார் பியர் மீனவர்கள் தலைமன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.மீட்கப்பட்ட படகில் ‘அமுத விஜி ஸ்ரெபானி’ எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட படகு தற்போது தலைமன்னார் பியர் கடற்கரைப்பகுதியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு முன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள புரெவி புயல் தாக்கத்தின் எதிரொலியாக குறித்த கடலில் மூழ்கி கரை ஒதுங்கி இருக்கலாம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.மேலதிக விசாரனைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.