இலங்கையில் முதல் முறையாக மருத்துவர் ஒருவர் கொரோனாவிற்குப் பலி..!!

கொரோனா வைரஸ் தொற்றால் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 69 வயதான வைத்தியரே வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.மட்டக்குளிப் பகுதியைச் சேர்ந்த வைத்தியர் கொரோனா தொற்றிற்குள்ளான பின்னர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அவர் அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் மட்டக்குளி, கொம்பனி தெரு பகுதிகளில் இரண்டு சிகிச்சை மையங்களில் சிகிச்சையில் ஈடுபட்டு வந்துள்ளார்.அவர் சில நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுமிருந்தார்.