அடைமழையினால் நீச்சல்குளமாக மாறிய யாழ். போதனா வைத்தியசாலை!! (படங்கள் இணைப்பு)

யாழ் நகரில் சரியான வடிகால் அமைப்பு வசதியின்மையால் போதனா வைத்தியசாலையின் சில விடுதிக் கட்டடங்கள் அமைந்துள்ள பகுதிகள் நீரில் மூழ்கின.சில வைத்திய சேவைகள் தற்காலிகமாக இடங்களுக்கு மாற்றப்பட்டு சிரமத்தின் மத்தியில் வழங்கப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தின் மோசமான வடிகாலமைப்பே இந்த வெள்ள அனர்த்தத்திற்கு காரணம். யாழ் மாநகரசபை இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தாததால் பொதுமக்களின் கடுமையான விமர்சனத்தை சந்தித்துள்ளது.