மொரட்டுவை – எகடவொயன என்ற இடத்தில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 1 மற்றும் 7 வயதுகளை கொண்ட பெண் பிள்ளைகள் இருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.வீதியைக் கடந்து செல்லும் பாதசாரிகள் கடவையில் குறித்த பெண் பிள்ளைகளுடன் அவர்களுடைய தாய் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிரில் வந்த உந்துருளி அவர்கள் மீது மோதி இருக்கிறது.
