அமெரிக்காவின் சாதனையை தகர்த்தெறிந்து சந்திரனில் தமது தேசியக்கொடியை வெற்றிகரமாக நாட்டிய சீனா!!

சீனா தமது தேசியக்கொடியை சந்திரனில் நாட்டியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.சீனாவின் சாங்கி 5 என்ற விண்கலத்தினால் இந்தக்கொடி நாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா தமது தேசியக்கொடியை சந்திரனில் நாட்டி சுமார் 50 வருடங்களுக்கு பின்னர் சீனா தமது கொடியை அங்கு நாட்டியுள்ளது.சந்திரனில் சீனா தமது தேசியக்கொடியை நாட்டியுள்ளது. சீனாவின் முதல் விண்கலத்தினால் இந்தக்கொடி நாட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.அமெரிக்கா தமது தேசியக்கொடியை சந்திரனின் நாட்டி சுமார் 50 வருடங்களுக்கு பின்னர் சீனா தமது கொடியை அங்கு நாட்டியுள்ளது.1969இல் அமெரிக்கா தமது தேசியக்கொடியை சந்திரனில் நாட்டியது. பின்னர் 1972இல் 5 கொடிகளை அங்கு நாட்டியது.2012ஆம் எடுக்கப்பட்ட செய்மதிப் படங்களின்படி இன்னும் அந்தக்கொடிகள் உள்ளன.எனினும் சூரியனின் ஒளியினால் அங்கு வெண்மையாகியிருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை சீனாவினால் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட சாங்கி 5 என்ற விண்கலம் நேற்று இரவு சந்திரனில் இருந்து புறப்பட்டுள்ளது.இதன்போது அந்த விண்கலம் சந்திரனில் உள்ள பாறை உட்பட்ட பொருட்களை உடைத்து அதனை பூமிக்கு எடுத்து வருகிறது.இந்த நிலையில், விண்கலத்தினால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பாக மூடிவைக்கப்பட்டுள்ளதாக சீன விண்வெளி மையம் அறிவித்துள்ளது.சாங்கி 5 என்ற விண்கலமே சீனாவின் முதல் விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது.