இலங்கையின் ஒரு பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம்..!!

கண்டி மாவட்டத்தில் இன்றும் சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 7.30 அளவில் இந்த நிலநடுக்கம், கண்டி மாவட்டத்தின் திகன, அம்பாக்கோட்டை, கெங்கல்ல உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, இலங்கையில் இன்றுவரை 4 தடவைகள் நிலநடுக்கம் பதிவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.