வடபகுதி பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய செய்தி..மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்..!!

யாழ்.காரைநகர் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா அபாயம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 7ம் திகதி மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் சுகாதார பிரிவின் அனுமதியை மாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு வழங்கியிருக்கின்றார். கிளிநொச்சியில் வயோதிப் ஒருவருக்கு கடந்த 23ம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு 24ம் திகதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், 7ம் திகதி திங்கள் கிழமை தொடாக்கம் பாடசாலைகளை மீளவும் திறப்பதற்கான ஒப்புதலை கல்வியமைச்சுக்கு மாகாண சுகாதாரப் பிரிவு வழங்கியிருக்கின்றது. மேலும் காரைநகருக்கு கொழும்பில் இருந்து வந்திருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர் ஒருவரை அடையாளம் கண்டு, காரைநகர் இந்துக்கல்லுாரிக்கு 30ம் திகதி தொடக்கம் விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் அங்கும் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 7ம் திகதி தொடக்கம் பாடசாலைகளை மீள திறப்பதற்கு சுகாதார பணிப்பாளர் ஒப்புதல் வழங்கியிருக்கின்றர்.