சிறந்த வேலைவாய்ப்பை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு நல்ல செய்தி..விரைவில் நிரந்தரத் தீர்வு..!!

இளைஞர், யுவதிகள் எதிர்நோக்கும் வேலையில்லாப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதற்காக விசேட வேலைத்திட்டங்களை அரசு வகுத்துள்ளது என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கும் போது,இலங்கையில் 4.4 மில்லியன் பேர் வரையிலானோர் வேலையில்லாப் பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர். அவர்களில் 8 இலட்சத்துக்கும் அதிகமானோர் இளைஞர், யுவதிகளாவர்.இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களைப் போன்று தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்காது நிரந்தர வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கே அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.