கிளிநொச்சியில் பயணிகள் பேருந்து மீது வீழ்ந்த பாரிய மரம்.!! மயிழையில் உயிர் தப்பிய பயணிகள்..!!

கிளிநொச்சி ஏ-9 வீதியில் இன்று (04) மாலை 6.00மணியளவில் பொது
வைத்தியசாலைக்கு முன்பாக கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து மீது வீதியின் அருகில் இருந்த பாரிய மரம்
விழுந்ததில் பேரூந்தின் கூரைப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பொதுநலன் கருதி வைத்தியசாலையின் முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில்
இருந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் வீதியில் சென்றவர்கள் எனப் பலர்
பொதுநலன் கருதி உடனடியாக வீதியை விட்டு மரத்தை அகற்றியிருந்தனர்.