சற்று முன்னர் அச்சுவேலி- தொண்டைமனாறு வீதியை ஊடறுத்துப் பாயும் பெருவெள்ளத்தில் சிக்கிய வாகனம்..!! பொதுமக்களுக்கு விடுக்கப்படும் அறிவுறுத்தல்..!

யாழ்ப்பாணம் அச்சுவேலி தொண்டமணாறு வீதியில் தனியார் வணிக நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் வீதியை விட்டு விலகி உள்ளதனால் அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வாகனத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதன் காரணமாக அவ் வீதியில் போத்துவரத்து செய்வோர் அதனைத் தற்காலிகமாக தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.