கொழும்பில் நேற்று மட்டும் 402 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்..!!

நாட்டில் நேற்று 628 புதிய கொரோன தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 402 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

கொழும்பு மாவட்டத்தில் இருந்து அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கையில், வெலிக்கடை சிறையிலிருந்து அடையாளம் காணப்பட்ட 104 பேரும், தெமட்டகொடவிலிருந்து அடையாளம் காணப்பட்ட 52 பேரும் உள்ளடங்குகிறார்கள்.கொழும்பு மாநகசபை ஊழியர்கள் 49 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,542 ஆக உயர்ந்துள்ளது.கம்பஹா மாவட்டத்திலிருந்து 66 பேர் அடையாளம் காணப்பட்டனர். கம்பஹாவின் தொற்றாளர்கள் எண்ணிக்கை 6,568 ஆக உயர்ந்துள்ளது.இரத்னபுரியிலிருந்து 35 பேரும், களுத்துறையிலிருந்து 30 பேரும், காலியிலிருந்து 15 பேரும், அம்பாறையிலிருந்து 14 பேரும், கேகாலையிலிருந்து 07 பேரும், குருநாகலில் இருந்து 04 பேரும், அனுராதபுரத்திலிருந்து 02 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.மாத்தறை, கண்டி, நுவரெலியா, முல்லைத்தீவு, மொனாராகல, மாத்தளை மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டனர்.வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர், வகை குறிப்பிடப்படாத 44 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.ஒக்டோபர் 4 ஆம் திகதிக்குப் பிறகு மரணித்த 116 கொரோனா நோயாளிகளில் 67.24% நபர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.