யாழ் மக்களுக்கு ஓர் முக்கியமான அறிவிப்பு..கனமழையின் எதிரொலி..தொண்டைமனாறு கடல் நீரேரியின் ஆறு வான் கதவுகளும் திறப்பு!!

யாழ்.மாவட்டத்தின் தொண்டைமனாறு கடல் நீரேரியின் ஆறு வான் கதவுகளும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் தலைமையில் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி, வல்லை, புத்தூர், கரவெட்டியின் மத்தொணி பகுதிகள் தாழ்நிலப் பிரதேசங்களாக காணப்படுகின்ற நிலையில், மேலதிக நீரினை வெளியேற்றும் நோக்கிலேயே தொண்டைமனாறு கடல் நீரேரியின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.ஆனாலும், கடலின் நீர்மட்டம் அதிகரித்துக் காணப்படுவதனால், தொண்டைமனாறு கடல் நீரிலிருந்து வழிகின்ற நீர் மீண்டும் கடல் நீரேரிக்குள் தள்ளப்படுவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.