தமிழர் தலைநகரில் தோற்றுப் போன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியின் வரவுசெலவுத் திட்டம்..!!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையின் கீழிருக்கும் திருகோணமலை பட்டணமும் சூழலும் (உப்புவெளி) பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.


தவிசாளர் ஞானகுணாளனினால் இன்று வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது, ஆதரவாக 10 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக 12 வாக்குகள் அளிக்கப்பட்டன.தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 7 உறுப்பினர்கள், சுயேட்சைகுழுவின் 2 உறுப்பினர்கள், ஐ.தே.கவை சேர்ந்த பிரதி தவிசாளர் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.பொதுஜன பெரமுனவின் 7 உறுப்பினர்கள், ஐ.தே.கவின் 2 உறுப்பினர்கள், வரதர் அணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி ஆகியவற்றின் தலா ஒவ்வொரு உறுப்பினர்கள் என 12 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.