யாழ். பொன்னாலைக் கடலில் காணாமல் போன கடற்றொழிலாளி சற்று முன்னர் சடலமாக மீட்பு..!!

பொன்னாலைக் கடலில் காணாமல் போன கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் இன்று இரவு 8.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


சுழிபுரம் பெரியபுலோவை சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் (37) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் 4 பிள்ளைகளின் தந்தையென்பது குறிப்பிடத்தக்கது.நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இவர் கடற் தொழிலுக்கு சென்றிருந்தார். நேற்றுக் காலை வீடு திரும்பாததையடுத்து, தேடுதல் நடத்தப்பட்டது.