யாழ். பருத்தித்துறையில் பெண்ணொருவருக்கு கொரோனா!!

பருத்தித்துறையில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 19ஆம் திகதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களிடம் நேற்று (2) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வயோதிப பெண்ணொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.