தொடரும் சீரற்ற காலநிலையினால் யாழ். நகரில் பொங்கி வழியும் கிணறு..!! பார்ப்பதற்குப் படையெடுக்கும் பொதுமக்கள்..!!

வடக்கு- கிழக்கு மக்கள் புரவிப் புயலின் தாக்கத்தினால் பாரிய அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.


புயலானது இலங்கையினை கடந்து சென்றுள்ளபோதும், அதன் தாக்கத்தால் நாட்டில் கடும் காற்றுடன் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், யாழ்மாவட்டத்தில் பல பிரதேசங்களிலும் வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.இந்நிலையில் அங்குள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதுடன், சில கிணறுகளில் நீர் நிரம்பி வழிவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.